tamilni 178 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் அழைப்பு

Share

ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் அழைப்பு

காச முனைகளில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையானது இஸ்ரேல் – ஹமாஸ் ஆகிய இரு தரப்புக்களிலும் இருந்து பல்லாயிரம் உயிர்களை காவு கொண்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையானது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களை கடந்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பை உடனடியாக சரணடைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் ஆனால் ஹமாஸ் அமைப்பின் அழிவு ஆரம்பித்துவிட்டது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு தனது அழைப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், ”இது பாலஸ்தீன அமைப்புகளின் முடிவு. எல்லாம் முடிந்துவிட்டது, உங்கள் தலைவர் சின்வாருக்காக நீங்கள் உயிரை விட வேண்டாம். சரண்டைந்துவிடுங்கள்” என கூறியுள்ளார்.

சில ஹமாஸ் அமைப்பினர் சரணடைந்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் இராணுவம் அதற்கான எந்த சான்றையும் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய ஹமாஸ் அமைப்பு யாரும் சரண்டையவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இதுவரை 17,700 இற்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்துள்ளது என்றும் 100 இற்கும் மேற்பட்ட கோயில்களை தரைமட்டமாக்கியுள்ளது என்றும் பள்ளிகள், மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும் ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்நிலையில் ஐநாவின் போர் நிறுத்தத்திற்கான எந்த முயற்சியும் வெற்றியைத் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...