tamilni 152 scaled
இலங்கைசெய்திகள்

துவாரகாவின் பெரியப்பா மனோகரன் முக்கிய இரகசியம்

Share

துவாரகாவின் பெரியப்பா மனோகரன் முக்கிய இரகசியம்

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவருக்கு 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக எமது உறவினர் ஒருவர் காணொளி வெளியிட்டு குறிப்பிட்டார், ஆனால் அது தொடர்பான விபரங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளவில்லை. அதில் தான் எங்களுக்கு சந்தேகம் வலுத்தது என விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் அண்ணன் மகன் மனோகரன் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எங்களது சித்தப்பாவின் மகள் துவாரகாவைச் சென்று சந்தித்துவிட்டு வந்ததாக, எமது உறவினர் அருணா கூறினார். எனினும், துவாரகாவைச் சந்தித்ததற்கான எந்தவொரு புகைப்படங்களோ, காணொளிகளோ அவர் எடுத்திருக்கவில்லை.

துவாரகா மற்றும் எனது சித்தப்பாவின் குடும்பத்தாரைச் சந்தித்து வந்துவிட்டதாகச் சொல்லி இரண்டு முறை அருணா காணொளிகளை வெளியிட்டிருந்தார். ஒருமுறையாவது அவர்களை சந்தித்ததற்கான புகைப்படங்களை வெளியிட்டிருக்கலாம். அல்லது அந்த செய்தியை எங்களோடு பகிர்ந்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

நாங்கள் அழைத்தபோது அவர்களுடைய தொலைபேசி இயங்கவில்லை. இதன்காரணமாகத்தான் எமக்கு சந்தேகம் வலுக்கத் தொடங்கியது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...