tamilni 434 scaled
உலகம்செய்திகள்

2024 ஆம் ஆண்டில் உலகிற்கு வரவிருக்கும் பேரழிவு

Share

2024 ஆம் ஆண்டில் உலகிற்கு வரவிருக்கும் பேரழிவு

பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.

இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பல விடயங்களை கணித்துள்ளார்.

அந்த வகையில், பாபா வங்காவின் 2024 ஆம் ஆண்டு குறித்த கணிப்புகள் தற்போது பேசு பொருளாகியுள்ளன.

ரஷ்ய அதிபர் புடின் அவரது நாட்டைச் சேர்ந்த ஒருவராலேயே கொல்லப்படுவார்.

ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கலாம், மிகப் பெரிய நாடு உயிரி-ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கும்.

அதிகரித்து வரும் கடன் அளவுகள் மற்றும் அதிகரிக்கும் புவி, அரசியல் பதற்றங்களால் மிகப் பெரிய பொருளாதார பிரச்சினை ஏற்படும். பெரிய அளவில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும்.

மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற இடங்கள் சைபர் ஹேக்கர்களால் குறிவைக்கப்படும்.

கேன்சர், அல்சைமர் போன்ற பெரிய மருந்து இல்லாத நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். குவாண்டம் கம்பியூடிங் தொழில்நுட்பம் அடுத்தகட்டத்தை எட்டும்.

2024ம் ஆண்டில் பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் இருக்கும் என்றும் அவர் முன்னறிவித்துள்ளார்.

பூமியின் சுற்றுப்பாதையில் சிறிது மாற்றம் வரலாம். இது மிக மிக மெதுவாக நீண்ட காலத்திற்கு நடக்கும். ஆனால், இந்த மாற்றத்தில் வேகம் அதிகரித்தால் பயங்கர இயற்கை பேரிடர் ஏற்படும்.

பாபா வங்காவின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டிலும் அதிக சைபர் தாக்குதல் நிகழலாம்.

ஹேக்கர்களின் பலம் அதிகரிக்கும். இவர்கள் மின் உற்பத்தி ஆதாரங்களையும் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கலாம். இதனால் தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்.

பாபா வங்காவின் கணிப்பின்படி, 2024 ஆம் ஆண்டில் மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்.

குறிப்பாக புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.

வறண்ட பகுதிகள் மேலும் வறண்டு போகும் என்றும், அதிக வெள்ள பெருக்குகள் ஏற்படும் என்றும், பஞ்சம் ஏற்படலாம் என்றும் கணித்துள்ளார்.

சீனாவுடன் கடற்படை மோதல் ஏற்படும். அடையாளமே இல்லாத ஒருவர் அரசராவார். போப்பாண்டவர் மாற்றப்பட்டு இளம் போப் உருவாவார்.

Share
தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...