வடக்கு-கிழக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கான தகவல்
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், 2016 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், அந்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் செயற்படுத்தப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.