tamilni 381 scaled
இலங்கைசெய்திகள்

மருத்துவர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் தகவல்

Share

மருத்துவர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் தகவல்

இலங்கையில் மருத்துவர்கள் அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் வைத்தியர் பாலித மஹிபால இதனை தெரிவித்துள்ளார்.

கல்வி உயர்கல்வி மற்றும் வேறும் காரணங்களுக்காக இலங்கை மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயரும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கற்கை நெறிகளுக்காக அல்லது வேறு தேவைகளுக்காக செல்லும் மருத்துவர்கள் நாடு திரும்பாதிருக்கும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு மருத்துவ பயிற்சிகளுக்காக சென்ற மருத்துவர்கள் பயிற்சி முடித்துக் கொண்டு நாடு திரும்பி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்கு மருத்துவர்கள் செல்வதனை மேலும் குறைத்துக் கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினாலும் வரி அறவீட்டு கொள்கைகளினாலும் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் நாட்டை வெளியேறி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...