உலகம்
4 லட்சம் அகதிகளை அதிரடியாக வெளியேற்றிய நாடு: நடவடிக்கை தொடரும் என அறிவிப்பு
4 லட்சம் அகதிகளை அதிரடியாக வெளியேற்றிய நாடு: நடவடிக்கை தொடரும் என அறிவிப்பு
உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த 4 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் வெளியேற்றியுள்ளது.
1979-1989 வரையிலான காலகட்டங்களில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போது லட்சக்கணக்கான ஆப்கான் மக்கள் அகதிகளாக பாகிஸ்தானுக்குள் குடியேறினர்.
பின் அடுத்தடுத்து நடந்த போர்களின் போது லட்சக்கணக்கான ஆப்கான் மக்கள் பாகிஸ்தானுக்குள் அகதிகளாக குடியேறினர்.
இந்நிலையில் அண்மை காலங்களாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வரும் தாக்குதலுக்கு அகதிகள் தான் காரணம் என குற்றஞ்சாட்டி வருகிறது.
இதற்கிடையில் உரிய ஆவணங்கள் இன்றி பாகிஸ்தானில் தங்கி இருக்கும் ஆப்கானியர்களை தங்களது சொந்த நாட்டிற்கு பாகிஸ்தான் திருப்பி அனுப்பி வருகிறது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் செய்தி தொடர்பாளர் ஜபீஹூல்லா முஜாஹித் வழங்கிய தகவலில், இதுவரை 4 லட்சம் பேரை ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் திருப்பி அனுப்பியுள்ளது என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிகாரிகள் இது தொடர்பாக தெரிவித்த தகவலில், தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் அனைவரையும் வெளியேற்றும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என தெரிவித்துள்ளார்.