Bigboss season 5 - வெளியாகிறது புரொமோ!
சினிமாசெய்திகள்

இவனுக்கு எல்லாம் எதுக்கு சாப்பாடு, பிக்பாஸ் 7 புகழ் பிரதீப்பை அசிங்கப்படுத்திய பிரபலம்

Share

இவனுக்கு எல்லாம் எதுக்கு சாப்பாடு, பிக்பாஸ் 7 புகழ் பிரதீப்பை அசிங்கப்படுத்திய பிரபலம்

விஜய் தொலைக்காட்சியில் பெரிய பட்ஜெட்டில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் 7.

கமல்ஹாசன் தொகுத்து வழங்க 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி 50 நாளை நெருங்கிவிட்டது, ஆனால் அதற்குள் ஏகப்பட்ட பரபரப்பான விஷயங்கள் நடந்து முடிந்துவிட்டன.

அடுத்து வரப்போகும் 50 நாட்களில் என்னென்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை, ஆனால் பல அதிரடி நிகழ்வுகள் நிகழ்ச்சியில் நடக்கும் என்பது மட்டும் உறுதி.

இதுவரை நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களில் பிரதீப்பை Red Card கொடுத்து வெளியே அனுப்பியது தான் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மீண்டும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்குள் வர வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை, அது நிறைவேறுமா என்பது தெரியவில்லை.

இயக்குனர் கனவோடு இருந்த பிரதீப் தற்போது அதற்கான பயணத்தின் வேலைகளில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரதீப் தனது வாழ்க்கையில் சந்தித்த மோசமான நிகழ்வு குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், அருவி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆன பிரதீப் அதை தொடர்ந்து வாள் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

பிரதீப் ஒரு பேட்டியில், என்னுடைய முதல் படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு பசி வந்ததால் நான் சாப்பிட சென்றேன், புரொடக்ஷனில் சாப்பாடு போடுபவர் என்னை பார்த்தவுடன் வாங்க சார் என்று அழைத்தார்.

அப்போது புரொடக்ஷன் மேனேஜர் அங்கு வந்தார், அவர் டேய் இவனுக்கெல்லாம் எதுக்குடா சாப்பாடு போடற என்று திட்டினார். அன்றில் இருந்து நான் அந்த செட்டில் சாப்பிடவே இல்லை என்று பேசியிருக்கிறார்.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...