5 6 scaled
உலகம்செய்திகள்

1 லட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு: அழைப்பு விடுக்கும் பிரபல நாடு

Share

1 லட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு: அழைப்பு விடுக்கும் பிரபல நாடு

தங்கள் நாட்டின் பல துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பில் அதிகப்படியான இந்தியர்களுக்கு தைவான் அழைப்பு விடுத்துள்ளது.

உலகின் பல நாடுகளில் உள்ள பல்வேறு துறைகளில் இந்தியர்கள் கால் பதித்து இருப்பதோடு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில் கனடா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சுமார் 1 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக தைவான் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தைவான் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள தகவலில், தைவானின் தொழிற்சாலைகள், பண்ணைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல துறைகளில் பணிபுரிய 1 லட்சம் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து இந்தியா-தைவான் இடையே அடுத்த மாதம் தொழிலாளர்கள் ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்தியா-சீனா, சீனா-தைவான் இடையே எல்லை பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த புதிய ஒப்பந்தம் மூலம் கூடுதல் பதட்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...