இன்றைய ராசி பலன் 07.11.2023 – Today Rasi Palan
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசிபலன் நவம்பர் 6, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 21 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மத்தில் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் சந்திர பகவான் சஞ்சாரம் செய்வதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்வ புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். செவ்வாய்க் கிழமையான இன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உங்களுக்கு வழக்குகள், விசாரணைகள் இருப்பின் அதில் உங்களுக்கு சாதக பலன்கள் கிடைக்கும். பங்கு சந்தை முதலீடுகள் வெற்றியைத் தரும்.
இன்று விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் அலுவல விஷயங்களில் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு விலகும். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். நீண்ட தூர பிரயாணங்கள் வெற்றியைத் தரும். ஆன்மிகத்தில் ஆர்வம் ஏற்படும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனக்கவலைகள் தீரும். இன்று பல மாதங்களுக்கு பிறகு நீங்கள் நினைத்த விஷயத்தில் சாதக பலன் கிடைக்கும். தன லாபங்கள் அதிகரிக்கும். உங்களுக்கு கிடைக்கக்கூடிய வியாபார முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். தொலை தூரத்தில் இருப்பவர்கள் மூலம் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். வங்கி சார்ந்த பிரச்னைகள், வீடு, மனை தொடர்பான விவகாரங்கள், குழப்பங்கள் தீரும். செவ்வாய்க் கிழமையான இன்று முருகப் பெருமானை வழிபாடு செய்யலாம். திருமண தடைகள் விலகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பல மாதங்களாக இழுபறியில் இருந்து வந்த வேலைகள் சாதகமாக முடிவடையும். கோர்ட் விவகாரம், வங்கு சார்ந்த பிரச்னைகள், வீட்டு விவகாரங்கள், கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். மன நிறைவும், தெளிவும் கிடைக்கும். காலை வேளையில் உங்கள் நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று காதலர்களுக்கு நல்லதொரு நாளாக அமைகிறது. ஒரு சிலருக்கு திருமண யோகங்கள் கைகூடும். இன்று மனதிற்கு நிறைவான நாளாகவும் இருக்கும். உங்களுக்கு மாலை நேரத்தில் நற்செயல்கள், நற்செய்திகள் கிடைக்கும். தொலைதூர செய்திகள் சுப விஷயம் நடக்க உதவும். செவ்வாய்க் கிழமையான இன்று முருகன் வழிபாடு செய்யவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல்கள் அதிகம் இருக்கும். வேலை சார்ந்த விஷயங்களில் குழப்பம் இருக்கும். பைரவருக்கு தீபம் ஏற்ற மனக்குறைகள் தீரும்.
சித்திரை மற்றும் விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். ஏமாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மன நிறைவு தரும் நாள். பல மாதங்களாக இருந்து வந்த மன கசப்பு தீரும். இன்று கணவன் – மனைவி உறவு திருப்தியாக இருக்கும். இன்றைய நாளில் நீங்கள் காலை வேளையில் சந்திக்கக்கூடிய நபர்கள் மூலம் வெற்றிகள் கிடைக்கும். நாள் முழுவதும் மன ஆறுதல், திருப்தி கிடைக்கும். இன்று விநாயகர் வழிபாடு செய்யவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகமான நாளாக அமைகிறது. நீண்ட தூர பயணங்கள், ஆன்மிக யாத்திரை போன்றவற்றில் வெற்றிகள் கிடைக்கும். இன்று மனதிற்கு திருப்தியானதாக இருக்கும். பல நாட்களாக இழுபறியில் இருந்து வந்த வேலைகள் நிறைவடையும். இன்று பசுமாடுகளுக்கு உணவளிக்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு மன நிறைவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது. நீங்கள் பசுமாடுகளுக்கு உணவளிக்க உங்களுக்கான கிரக தோஷங்கள் தீரும்.
இன்று எந்த ஒரு காரியத்திலும் கூடுதல் கவனமும், திட்டமிட்டும் செயல்படவும். உங்களின் கவனமான செயலால் மனநிறைவு கிடைக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகமான நாளாக அமைகிறது. பலநாட்களாக இருந்து வந்த மன பாரங்கள் விலகும். குழந்தைகளுக்கு ஏற்ற நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் குறைந்து சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள்.
இன்று செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் நரசிம்மருக்கு தீபம் ஏற்ற கடன் பிரச்னைகள் தீரும். ருண விமோசனம் ஸ்லோகம் கூறி வழிபாடு செய்ய கடன் தொல்லையும், ஆரோக்கிய குறையும் நீங்கும். செயல்களில் வெற்றி உண்டாகும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மீன ராசியினருக்கு நல்ல மன அமைதி கிடைக்கும். பல மாதங்களாக இருந்து வந்த கடன் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும். செவ்வாய்க் கிழமையான இன்று குலதெய்வ வழிபாடு செய்ய மனக்குறைகள் தீரும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன சஞ்சலம் உண்டாக வாய்ப்புள்ளது.
- daily rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan sun tv
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- november madha rasi palan tamil
- october rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi weekly rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- vendhar daily rasi palan
- vendhar tv rasi palan
- weekly rasi palan october
- zee tamil rasi palan today
- இன்றைய ராசி பலன்