2 scaled
ஏனையவை

21 வயதிலெடுத்த துணிச்சலான முடிவு – `பிக் பாஸ்’ அர்ச்சனாவின் கதை!

Share

21 வயதிலெடுத்த துணிச்சலான முடிவு – `பிக் பாஸ்’ அர்ச்சனாவின் கதை!

வீட்டிற்குள் சென்ற முதல் நாளிலிருந்து பல முறை அழுதவர் யார் எனத் தெரியுமா? சுயமரியாதை எனக்கு ரொம்பவே முக்கியம் எனச் சொல்லும் இவர் கடந்து வந்த பாதை என அவர் அளித்தப் பேட்டியில் அவரிடம் பேசியதிலிருந்து…

” என்னோட அப்பா காலேஜ் புரொபசர். அதனால எங்க வீட்ல எப்பவும் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பாங்க. எனக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க. சின்ன வயசுல இருந்தே டிவி பார்க்கும்போது இது மாதிரி நாமளும் ஒரு நாள் டிவியில் வரணும்னு ஆசைப்பட்டேன்.

ஸ்கூல், காலேஜ்ல எல்லா கல்சுரல்ஸிலும் கலந்துப்பேன். கல்சுரஸ் வந்துட்டாலே என்கிட்ட கூட கேட்காம என் பெயரைக் கொடுத்துடுவாங்க. ஆதித்யா டிவியில் விளம்பரத்தைப் பார்த்துட்டு நான் பண்ணின டப்ஸ்மாஷை, டப்ஸ்மாஷ் போட்டிக்கு அனுப்பி வச்சிருந்தேன்.

ஆனாலும், நான் கேட்கல. அழுது அடம்பிடிச்சதும், `இதுல ஜெயிச்சா நீ நினைச்சதைப் பண்ணு, ஆனா, தோத்துட்டா அதுக்குப்பிறகு ஒழுங்கா இன்ஜினீயரிங் முடிக்கிற வழியைப் பாரு’னு கண்டிஷன் போட்டு அனுப்பி வச்சாரு.

எங்க அம்மா எனக்கு ரொம்ப சப்போர்ட். அந்தப் போட்டியில் கலந்துக்க என்கூட என் அம்மா வந்திருந்தாங்க. நானும் என்னோட பெஸ்ட்டைக் கொடுத்தேன். எதிர்பாராம அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின் பண்ணினேன்.

அதுக்குப்பிறகு அவங்களே என்னை ஆங்கரிங் பண்ணச் சொல்லி கூப்பிட்டாங்க. அப்படித்தான் ஆதித்யா டிவியில் ஆங்கராக என்னுடைய கெரியர் ஆரம்பிச்சது. காலேஜ், ஸ்கூல்னு எல்லாரும் பரபரப்பா கிளம்புற நேரத்துல என் ஷோ இருந்ததால, என் ஷோ பெருசா ரீச் ஆகல.

அதனால ஆங்கரிங்ல பெருசா சொல்ற மாதிரியான அனுபவம் எதுவுமில்லை. என்னுடைய ஃபோட்டோ பார்த்துட்டு பிரவீன் பென்னட் சார் என்னை மீட் பண்ண வரச் சொல்லியிருந்தார். ஆரம்பத்தில் 21 வயசில எப்படி அண்ணி கேரக்டர் பண்றதுன்னு தயங்கினேன்.

அதனைத் தொடர்ந்து அர்ச்சனா திடீரென அந்தத் தொடரில் இருந்து விலகினார். அவர் விலகிய பிறகு பலரும் அவர் திரைப்படத்தில் நடிக்கப் போகிறாரா, இல்லை வேறேதும் தொடரில் நடிக்கப் போகிறாரா எனத் தொடர்ந்து கேட்டதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்த அர்ச்சனா திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடரில் அவர் வில்லியாக நடித்ததைப் பார்த்து அவரை ரசித்த மக்கள் இனி அவருடைய உண்மையான குணத்தைப் பார்க்க இருக்கிறார்கள்.

அவருக்குத் தொடர்ந்து மக்கள் ஆதரவு கொடுப்பார்களா? ஆரம்பத்திலேயே எனக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம் என அழுதவர் அந்த வீட்டில் தொடர்ந்து தாக்குப்பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Share
தொடர்புடையது
ஏனையவை

வெளிநாட்டு வேலைக்குச் செல்வோர் கவனத்திற்கு: சலுகை விலையில் விமான டிக்கெட் வழங்கும் சாளரம் திறப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்காக, நாரஹேன்பிட்டையில் உள்ள...

images
ஏனையவைஇந்தியாசெய்திகள்

இந்தியாவில் தயாரான மூன்று இருமல் மருந்துகள் : உலக சுகாதார நிறுவனம் விடுத்த எச்சரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த மருந்துகளை...

16 7
ஏனையவை

நடிகை பூஜா ஹெக்டே இத்தனை கோடி சொத்துக்கு சொந்தரியா.. அடேங்கப்பா!!

இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்திய சினிமாவில் தனக்கென்று...

14 7
ஏனையவை

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும்.. தவாக தலைவர் அதிரடி பேச்சு

பிக் பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள்...