22 63031c35a56ad
உலகம்செய்திகள்

26 வயது 22 குழந்தைகளுக்கு தாயான இளம்பெண்!

Share

26 வயது 22 குழந்தைகளுக்கு தாயான இளம்பெண்!

ஜார்ஜியா நாட்டில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய 26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இளம்பெண்ணின் வித்தியாசமான ஆசை
ஜார்ஜியா நாட்டில் வசித்து வரும் ரஷ்யாவை சேர்ந்த 26 வயதுடைய கிறிஸ்டினா ஓஸ்டுர்க் என்ற இளம்பெண், 58 வயதுடைய காலிப் ஓஸ்டுர்க் என்ற ஆணுடன் திருமண உறவில் இருந்து வருகிறார்.

கோடிஸ்வரரான காலிப் ஓஸ்டுர்க் பல ஹோட்டல்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் மனைவி கிறிஸ்டினாவுக்கு 105 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமான ஆசை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதற்கு கணவர் காலிப் ஓஸ்டுர்க் அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மனைவி கிறிஸ்டினா தற்போது தன்னுடைய 26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். முதலில் பிறந்த குழந்தை மட்டுமே கிறிஸ்டினா-வின் நேரடி பிரசவத்தில் பிறந்தது.

அந்த குழந்தைக்கு தற்போது 9 வயது ஆகிறது. மற்ற 21 குழந்தைகளும் வாடகை தாய் முறையில் பெற்றெடுத்து கிறிஸ்டினா தற்போது 22 குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

அத்துடன் கிறிஸ்டினா தன்னுடைய 22 குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், தனக்கு 100 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆசை, எனவே 100 குழந்தைகளை தாண்டி பெற்றுக் கொள்ளும் வரை இதனை நிறுத்த மாட்டேன் என கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...