rtjy 276 scaled
உலகம்செய்திகள்

நெதன்யாகுவை சந்தித்த இத்தாலி, சைப்ரஸ் தலைவர்கள்

Share

நெதன்யாகுவை சந்தித்த இத்தாலி, சைப்ரஸ் தலைவர்கள்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை இத்தாலி மற்றும் சைப்ரஸ் நாட்டு தலைவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் வரலாற்றில் கடந்த 7ஆம் திகதி கருப்பு நாளாக அமைந்தது. ஹமாஸ் அமைப்பு திடீரென இஸ்ரேல் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலால் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

குறித்த சந்திப்பில் நெதன்யாகுவிடம், இஸ்ரேல் மற்றும் அந்நாட்டு மக்களுக்கான தன்னுடைய நாட்டின் ஆதரவை மெலோனி வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட வேண்டும். அதனை சிறந்த வழியில் நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என கூறியுள்ளார்.

இதேபோன்று, சைப்ரஸ் நாட்டின் அதிபர் கிறிஸ்டோதவுலைட்ஸ் உடனான நெதன்யாகுவின் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பில், ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இந்த போரானது, காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான நாகரீகத்தின் போர் என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

எங்கள் சமூகத்திற்கு எதிராக விவரிக்க முடியாத அளவுக்கு விசயங்கள் நடந்துள்ளன. அவர்கள் மக்களை சிறை பிடித்தனர். பெண்களை பலாத்காரம் செய்தனர் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பு அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேலுக்கு சென்று தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...