rtjy 312 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் வேலைத்திட்டம்

Share

இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் வேலைத்திட்டம்

விசா இன்றி சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் செயற்பாட்டுக்காக, அங்கிருக்கும் இலங்கையர்களின் தகவல்களை திரட்டும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் இஸ்ரேலில் இருக்கும் இலங்கை தூதரகத்தில் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் எயால் சிஸ்சோ உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் இலங்கை தூதரகத்துக்கு வந்து, தூதுவருடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது விசா காலம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து இஸ்ரேலில் தங்கி இருக்கும் இலங்கையர்களின் விசா அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்குமாறு குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கைக்கு இஸ்ரேல் குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாகவும் விசா இனுமதிப்பத்திரம் இல்லாமல் தங்கி இருக்கும் இலங்கையர்களின் தகவல்களை கோரியதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே விசா காலம் முடிவடைந்த பின்னரும் இஸ்ரேலில் தங்கி இருக்கும் இலங்கையர்களுக்கு விவசாய பிரிவில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...