இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலி எண்ணிக்கை 7000 ஆக உயர்வு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் 7000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
18வது நாளாக தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த தாக்குதலில் இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தப் போரில் பலியானோர் எண்ணிக்கை 7,292 ஆக உயர்ந்துள்ளது.
இதில் இஸ்ரேலில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1,405 பேரும், காசா முனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5,791 பேரும் உயிரிழந்தனர்.
இதற்கிடையில் காசா முனையின் டீர் அல் பலஹா மாகாணம் நுசிரட் நகரில் உள்ள மார்க்கெட் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.