பெளத்தம் பற்றி எமக்கு வகுப்பு எடுக்கும் இலங்கை அரசின் வக்கிர புத்தியை ரொஹான் ரத்வத்தையின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இதற்கு பதிலளிக்க வேண்டும் எனஎனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சில் ரோஹன் ரத்வத்த அங்கு சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து துப்பாக்கிமுனையில் மிரட்டியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தனது ருவிற்றர் பக்கத்தில் கண்டனம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேற்படி பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது பதிவில்,
“ஒரு இராஜாங்க அமைச்சர் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று, துப்பாக்கி முனையில், தமிழ் கைதிகளை முழந்தாளிட செய்துள்ளார். இதொரு பாரிய மனித உரிமை மீறிய கிரிமினல் செயல்” எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a comment