பொதுவாக நமக்கு வரும் கனவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தை நமக்கு உணர்த்துகின்றன.
அதிலும் கனவில் உங்கள் முன்னோர்களை கண்டுள்ளீர்களா? அப்படி கண்டால், அதை புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் இம்மாதிரியான கனவுகள் நாம் எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நமது முன்னோர்கள் விரும்புகிறார்கள் அல்லது சில சூழ்நிலைகளை நமக்கு தெரியப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம்.
எனவே முன்னோர்கள் கனவில் வந்தால், அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒருவரது கனவில் முன்னோர்களைக் கண்டால் அது எதை உணர்த்துகிறது என்பதைக் காண்போம்.
- உங்கள் கனவில் உங்களை நோக்கி உங்கள் முன்னோர்கள் கைகளை நீட்டி பேசுவதைக் கண்டால், அது நீங்கள் சிரமப்படுவதைக் கண்டு அவர்கள் வருத்தப்படுவதையும், அதற்காக ஏதாவது செய்ய விரும்புவதையும் உணர்த்துகிறது.
- உங்கள் முன்னோர்கள் உங்களிடம் ஏதாவது கேட்பது போன்று கனவு வந்தால், நீங்கள் பிராமணருக்கோ அல்லது ஏழை மக்களுக்கோ உணவை வழங்க வேண்டும். ஒருவேளை ஏழை மக்கள் எதை கேட்டாலும் கொடுப்பதன் மூலம் அவர்கள் திருப்திபபடுவார்கள்.
- உங்கள் கனவில் தலைக்கு அருகே உங்கள் முன்னோர்கள் நிற்பதைக் கண்டால், உங்கள் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று அர்த்தம். ஆனால் உங்கள் முன்னோர்கள் கால்களுக்கு அருகில் நிற்பதைக் கண்டால், நீங்கள் ஒரு தொந்தரவான சூழ்நிலையை சந்திப்பீர்கள் அல்லது ஏற்கனவே ஒரு மோசமான நிலையில் இருந்தால், அது மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
- கனவில் உங்கள் முன்னோர்கள் உங்கள் தலையை தடவுவதைக் கண்டால், அவர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் உங்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்குகிறார்கள் என்று அர்த்தம். அவர்களின் ஆசியால் உங்களின் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
- உங்கள் கனவில் உங்களின் மூதாதையர் சில நொடிகளில் வந்து மறைந்துவிட்டால், நீங்கள் சில பிரச்சனைகளில் சிக்கவிருப்பதைக் குறிக்கிறது. எனவே அதை எதிர்த்துப் போராட உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அது அறிவுறுத்துகிறது.
- கனவில் முன்னோர்கள் உங்களுடன் நடப்பதைக் கண்டால் அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் உங்களுடன் இருக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். மேலும், விரைவில் உங்கள் புகழ் உயரும்.
- உங்கள் கனவில் முன்னோர்கள் கோபமாக இருப்பதைக் கண்டால், உங்கள் மூதாதையர் சொத்துகளுக்காக சில தகராறுகள் இருப்பதை அது குறிக்கிறது. மேலும் சொத்து, நிலம் அல்லது வீட்டில் சில தோஷங்கள் இருப்பதையும் இது உணர்த்துகிறது.
#spiritual
Leave a comment