எல்லோர் வீடுகளிலும் ஏற்றப்படும் விளக்கு காமாட்சியம்மன் விளக்கு. மகிமை நிறைந்த மங்களப் பொருட்களில் இதுவும் ஒன்று. எனவே, தான் இதனை புனிதமாகக் கருதுகின்றனர்.
இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. இந்த விளக்கை, சுவாமி பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட்டு வந்தால் வறுமை விலகும். செல்வம் பெருகும். குலம் தழைக்கும்.
ஒரு சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எது என்பது தெரியாது. அப்படியானவர்கள், காமாட்சி அம்மனையே குலதெய்வமாக நினைத்துக் கொண்டு, ‘நீயே என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று!’ என வணங்கியபடி விளக்கேற்றி வழிபடலாம்.
அவ்வாறு செய்யும் போது நன்மைகள் மேலோங்கும். மேலும் அப்படி ஏற்றப்படும் தீபத்திற்குப் பெயர் “காமாட்சி தீபம்” என்பதாகும்.
#anmigam
Leave a comment