1801140 karthigai sunday vishnu pooja
ஆன்மீகம்

கார்த்திகை ஞாயிறு – விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடுங்கள்

Share

கார்த்திகை மாதம் துவாதசி நாளில், துளசி தேவி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருந்து துளசி தளைகளால் மகா விஷ்ணுவை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளைக்கும் ஒவ்வொரு அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டு என்பர்.

துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதி தேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம்.

விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.

நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.

கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, விரதம் இருந்து சிவவிஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

#Anmigam

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மன்னார் மடுமாதா ஆடி திருவிழா
ஆன்மீகம்இலங்கைசெய்திகள்

மன்னார் மடுமாதா ஆடி திருவிழா!!!

மன்னார் மடுமாதா ஆடி திருவிழா மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா மிகச்...

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!
ஆன்மீகம்இலங்கைசெய்திகள்

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை! பெல்லன்வில விகாரையின் 2023 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹெர...

23 649aec1a6f6f2
ஆன்மீகம்இலங்கைசெய்திகள்

வரலாற்றுச் சின்னமாகிறது மகாவம்சம்..!

இலங்கையின் மகாவம்சம் நூல், யுனெஸ்கோ அமைப்பினால் வரலாற்று சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இந்த...

download 19 1 2
ஆன்மீகம்

பிரிந்த தம்பதிகளை இணைக்கும் ஆலயம்!

பிரிந்த தம்பதிகளை இணைக்கும் ஆலயம்! பார்வதி தேவியின் சாபம் நீங்கி இறைவனுடன் இணைந்த தலம் இது....