1796193 karunkalui maalai
ஆன்மீகம்

திருமண தடைகளை நீக்கும் கருங்காலி மாலை

Share

நவக்கிரக நாயகர்களில் செவ்வாய் பகவானுக்குரியதாக விளங்கும் கருங்காலி மாலை அணிவதன் மூலம் தடங்கல்கள் நீங்கி அனைத்து காரியமும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை.

இந்த கருங்காலி மாலையானது அதிக உறுதி தன்மை கொண்ட மரத்தில் இருந்து மணிகளாக செதுக்கி, 108 மணிகளை கொண்டு மாலையாக தயாரிக்கப்படுகிறது. இது கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் நீக்கி நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் சக்தி படைத்தது.

கருங்காலி மாலை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாலை முறைப்படி பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மாலையை தொடர்ந்து அணிந்து கொண்டிருப்பவர்களுக்கு வாழ்வின் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைந்து உள்ளது. குறிப்பாக தொழிலில் வெற்றி இலக்கை எட்ட வேண்டுமென்றால் இந்த கருங்காலி மாலையை அணிந்து கொள்ளலாம்.

அனைவரது வாழ்க்கைக்கும் அடித்தளமாக உறவுகள் அமையும். தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள், சகோதரர்கள் என உறவினருடன் எந்தவொரு பெரிய பிரச்சினையும் ஏற்படாமல் சந்தோஷமாக வாழ்வதற்கு கருங்காலி மாலை வழிவகுக்கிறது. மேலும், வணிக தொடர்பு கொண்ட உறவின் வளர்ச்சிக்கும் சிறப்பு வாய்ந்தது.

பைரவரின் ஆசீர்வாதம் கிடைப்பவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அவரது ஆசீர்வாதத்தை பெறுவதற்கான மிக எளிய வழியாக கருங்காலி மாலை உள்ளது. இதை கழுத்தில் அணிவது மூலமாக அவரது ஆசீர்வாதத்தை பெறலாம். இதன் மூலமாக பைரவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கும்.

நவக்கிரகங்களில் மிக வலுவானதாகவும், வேகமானதாகவும் செவ்வாய் கிரகம் உள்ளது. அந்த கிரகத்துக்குரிய மாலையாகவும் கருங்காலி மாலை திகழ்கிறது. இந்த மாலையை அணிந்திருந்தால் பிரச்சினைகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவராக விளங்கலாம். மன உறுதி அதிகமாகும்.

இறைவனுக்கு ஸ்லோகங்கள் சொல்லவும் பயன்படுத்தலாம். இறை ஆகர்ஷண சக்தி அதிகமுள்ள கருங்காலி மாலை பயன்படுத்துவதால் உடலில் உள்ள பிரச்சினை நீங்குவதோடு தன வசியம், வாழ்வில் முன்னேற்றம், குல தெய்வ அருள் கிடைக்கும். துன்பங்கள் மறையும். செல்வவளம் பெருகும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும். மனக்கசப்புகள் அகலும். சகல கிரக தோஷ நிவர்த்தி உண்டாகும்.

#anmigam

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மன்னார் மடுமாதா ஆடி திருவிழா
ஆன்மீகம்இலங்கைசெய்திகள்

மன்னார் மடுமாதா ஆடி திருவிழா!!!

மன்னார் மடுமாதா ஆடி திருவிழா மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா மிகச்...

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!
ஆன்மீகம்இலங்கைசெய்திகள்

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை! பெல்லன்வில விகாரையின் 2023 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹெர...

23 649aec1a6f6f2
ஆன்மீகம்இலங்கைசெய்திகள்

வரலாற்றுச் சின்னமாகிறது மகாவம்சம்..!

இலங்கையின் மகாவம்சம் நூல், யுனெஸ்கோ அமைப்பினால் வரலாற்று சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இந்த...

download 19 1 2
ஆன்மீகம்

பிரிந்த தம்பதிகளை இணைக்கும் ஆலயம்!

பிரிந்த தம்பதிகளை இணைக்கும் ஆலயம்! பார்வதி தேவியின் சாபம் நீங்கி இறைவனுடன் இணைந்த தலம் இது....