ஆன்மீகம்
நவராத்திரி ஏன் கொண்டாடுகிறோம்?


நவராத்திரி பண்டிகை துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 பெண் கடவுளை போற்றி வழிபடும் பண்டிகையாகும்.
9 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவார்கள். பத்தாம் நாள் வழிபாடு விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி என்றால் என்ன?
சர்வம் சக்தி மயம் என கூறுவது வழக்கம். நவராத்திரி என்றால் ஒன்பது இரவு என்று பொருள் உண்டு. நவ என்றால் ஒன்பது என்றும்,
புதுமை என்றும் அர்த்தமுண்டு. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக் கூடிய உன்னதமான விழா தான் இந்த நவராத்திரி திருவிழா.
நவராத்திரியின் நோக்கம் என்ன?
அம்பாள் மகிசாசூரனை வதம் செய்வதற்காக இந்த ஒன்பது நாட்கள் தவம் இருந்தார். அந்த காலம் தான் நவராத்திரி. முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் மூவரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த திருவிழா.
இதன் மூலம் சொல்லப்படும் தாத்பரிகம் என்னவென்றால், நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்களை எல்லாம் ஒன்று சேர்த்து, கெட்ட எண்ணங்களை அழிப்பதற்காக நம்மை பக்குவப்படுத்தக் கூடிய தவக்காலம் தான் இந்த நவராத்திரி.
நவராத்திரி ஏன் கொண்டாடுகிறோம்?
நவராத்திரி தினங்களில் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது விசேஷம். தினமும் ஒரு அம்பிகையின் அவதாரத்தை வழிபடுவது வழக்கமாக உள்ளது.
நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியங்களால் நைவேத்யம் செய்து அம்பாளுக்குப் படைத்து, அதை அருகில் உள்ளவர்களுக்கு கொடுப்பது நன்மை உண்டாக்கும்.