தாய்வானில்
உலகம்

தாய்வானில் முடக்கப்பட்ட இணைய சேவை – சீனாவின் அச்சுறுத்தலின் விளைவாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!

Share

தாய்வானில் முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாகத் தலைநகர் தாய்பேயில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டு, வீதிகள் அமைதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன படையெடுப்பு அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பயிற்சியானது 10 நாட்கள் நடத்தப்படுகின்றது.

இதன்போது, தாக்குதல் சூழலை செயற்கையாக உருவாக்கிப் பரிசோதிப்பதற்காக மொபைல் இணையச் சேவையின் வேகம் அரசாங்கத்தினால் திட்டமிட்டபடி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த இணைய வேகக் கட்டுப்பாட்டின் போது, நிலையான இணைய இணைப்புகள் மற்றும் வைஃபை (Wi-Fi) சேவைகள் தடையின்றி இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, போலி வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீதிகளில் பயணித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், வாகனங்களும் வீதியோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த சந்தர்ப்பத்தில், தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தே மற்றும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் அவசர மருத்துவ முகாமாக மாற்றப்பட்ட இடங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோக மையங்களைப் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சீனாவின் முற்றுகை முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில் தாய்வான் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை இணைந்து முதல்முறையாக கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் கூட்டுப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளன.

பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தாய்வான் பதிலளித்து வருவதாக அதிபர் லாய் சிங்-தே குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
car dubai
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் – இலங்கைக்கு கிடைத்தது யோகம்!

  ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, இலங்கை ஊடாக புதிய சரக்கு...

Meta Company
உலகம்

மெட்டாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று !

இன்றைய தினம், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) மீது, சிறார்களின்...

donalt drump
உலகம்

ஓமானை கடுமையாக எச்சரித்த அமெரிக்க அதிபர்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஓமன் தலையிட்டால்,...

antonello da messina
உலகம்

இத்தாலியில் திருடப்பட்ட பலநூறு கோடி ரூபா பெறுமதியான ஓவியங்கள்!

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் புகழ்பெற்ற...