உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் – இழப்புக்கள் தொடர்பில் மொஸ்கோ வெளியிட்டுள்ள தகவல்கள்.

2026 07 15T164046Z 166059555 RC2FEMAX5LOJ RTRMADP 3 UKRAINE CRISIS ATTACK ZAPORIZHZHIA 1784160211

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், ரஷ்யாவின் எல்லைப் பகுதியான பெல்கோரோடில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மொஸ்கோவில் உள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், இத்தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளைக் குறிவைத்து உக்ரைன் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருவதாக மொஸ்கோ குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன், எல்லைக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் உள்ள வணிக நிறுவனம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பெல்கோரோட் நகருக்கு வெளியே உள்ள பிறிதொரு நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள ஷெபெகினோ நகரில் பேருந்து ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதில் காயமடைந்த 19 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Exit mobile version