us canada
உலகம்Featured

கனடாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கி சூடு – பின்னனியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Share

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த, துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இருப்பினும், கட்டிடத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நான்கு மாத காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் பதிவான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், டொராண்டோ பகுதியில் உள்ள யூத தொழுகைக்கூடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்தே இச்சம்பவமும் இடம்பெற்றிருந்தது.

அத்துடன், கடந்த மார்ச் 10 ஆம் திகதியும் இந்தக் கட்டிடத்தை இலக்கு வைத்து பல துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது .

இதன் காரணமாக, கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களின் முன்பாகப் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, டொராண்டோ பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பணம் கொடுத்து, யூத தொழுகைக்கூடங்கள், யூத பாடசாலைகள் மற்றும் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தூண்டப்பட்டுள்ளமையினை அந்நாட்டு பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

 

Share
தொடர்புடையது
oil price down
வணிகம்Featured

குறைவடைந்தது எண்ணெய் விலை.

இன்று, கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில் 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க...

kenya gb cracked flag 1080x720px 2
உலகம்

இராணுவப் பயிற்சியை இரத்து – பிரித்தானியா, கென்யா உறவில் விரிசல்.

பிரித்தானியா, கென்யாவில் நடைபெறவிருந்த கூட்டு இராணுவப் பயிற்சியைப் இரத்து செய்த நடவடிக்கையானது, இரு நாடுகளுக்கும் இடையே...

Wildfires
உலகம்

பிரான்ஸில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில், குறிப்பாக ஜிரோன்ட் பிராந்தியத்தில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அவசரகால...

Noul
உலகம்

சீனாவில் நௌல் சூறாவளியின் கோரத்தாண்டவம் – நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து.

நௌல் சூறாவளியால், தென் சீனப் பகுதிகள் மற்றும் ஹொங்கொங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும்...