ஐபிஎல் தொடரில் பலத்துடன் களமிறங்கும் புதிய அணி!

New team

ஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள லக்னோ அணி தங்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாம்பவான் ஆண்டி ப்ளவரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

2022 ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக களம் இறங்குகின்றன.

இந்த இரண்டு அணிகளும் ஏலத்திற்கு முன்பாகவே 2 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை நேரடியாக ஒப்பந்தம் செய்யலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் லக்னோ அணியின் முதல் தேர்வாக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் தான் இறுதி செய்யப்பட்டுள்ளார். அவரை கேப்டனாக முன்னிறுத்தி ரூ.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே போல உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானையும் ரூ.16 கோடி கொடுத்து வளைத்து போட்டுள்ளது. இந்நிலையில் மெகா ஏலத்திற்கு வீரர்களை தேர்வு செய்து ஏலம் எடுக்க பயிற்சியாளர் அவசியம் தேவை.

அதற்காக ஜிம்பாவே அணியின் ஜாம்பவான் ஆண்டி ப்ளவரை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

#SportsNews

Exit mobile version