messi 19
விளையாட்டு

கோப்பையை கைப்பற்றியது ஸ்பெயின் – தகர்ந்தது மெஸ்சியின் கனவு.

Share

ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக FIFA உலகக் கிண்ணத்தினை வென்று சாதனை படைத்துள்ளது.

இதன் காரணமாக, உலகக் கிண்ணத்தை வெற்றிகரமாக வென்று விடைபெற வேண்டும் என்ற லியோனல் மெஸ்சியின் நீண்ட நாள் கனவு கண்ணீரோடு முடிந்தது.

முதல் உலகக் கிண்ணத்தை, கடந்த 2010ஆம் ஆண்டில் வென்று சம்பியன் பட்டம் பெற்ற ஸ்பெயின் அணி,16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கிண்ணத்தை தன்வசமாக்கியுள்ளது.

தற்போதைய சம்பியனான ஆர்ஜென்டினா, 1962இல் பிரேசில் அணிக்கு பிறகு உலகக் கோப்பையைத் தற்காத்துக் கொண்ட முதல் நாடு என்ற பெருமையைப் பெற கடுமையாகப் போராடியது.

இருப்பினும், ஸ்பெயின் அணியின் அபார ஆட்டத்தால் ஆர்ஜென்டினாவின் கனவு தகர்ந்தது. நடப்பு உலகக் கிண்ண தொடரில் மிகவும் பலம் வாய்ந்த ஆட்டத்தைக் கொண்ட ஆர்ஜென்டினா அணியால், இறுதிப் போட்டியில் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

அத்துடன், ஆரம்பம் முதலே நிதானமாக ஆடிய ஸ்பெயின் அணி, ஆட்டத்தின் 106ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டினாவின் தடுப்பாட்டத்தை உடைத்து கோல் அடித்தது. பெட்ரோ போரோ வழங்கிய பந்தை நிகோ வில்லியம்ஸ் கடத்த, அதனைப் பெற்ற பெரான் டோரஸ் மிக நேர்த்தியாக கோலாக மாற்றினார்.

இறுதிப் போட்டியின் கூடுதல் நேரத்திற்கு முன்பாக, ஆர்ஜென்டினாவின் என்ஸோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதால், அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது.

ஆர்ஜென்டினாவின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் அடுத்தடுத்து பல கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார்.

நிகோ வில்லியம்ஸ் அடித்த கோல் ஒன்றை VAR தொழில்நுட்பம் மறுத்தது. அதேபோல் பெரான் டோரஸ் அடித்த மற்றொரு கோலும் ஆஃப்சைட் என அறிவிக்கப்பட்டது.

ஆட்டத்தின் இறுதி நொடிகளில் லியோனல் மெஸ்சி தனது அசாத்திய திறமையால் மார்கோஸ் செனேசிக்கு ஒரு அருமையான பாஸ் கொடுத்தார்.

இருப்பினும், ஸ்பெயின் வீரர்கள் அதனைத் தடுத்து நிறுத்த, அர்ஜென்டினாவின் உலகக் கிண்ண கனவு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. ஸ்பெயின் வீரர்கள் மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட, மெஸ்சியின் கடைசி உலகக் கிண்ண பயணம் கண்ணீருடன் முடிவடைந்தது.

Share
தொடர்புடையது
gseui7olytm.hg
விளையாட்டு

இலங்கை அணி தொடர்பில் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுனில் கவாஸ்கர்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெறவுள்ள தீர்மானமிக்க இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக,...

LPL கிரிக்கெட்
விளையாட்டு

LPL கிரிக்கெட் போட்டிக்கு இலவச நுழைவு வசதி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இன்று, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள லங்கா LPL கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப்...

Team India Have Arrived In Sri Lanka
விளையாட்டு

இலங்கை வந்தடைந்தது இந்திய அணி.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக...

Rumesh Tharanga
விளையாட்டு

வரலாற்று சாதனையுடன் இலங்கைக்கு கிடைத்த தங்கம்.

இலங்கை வீரரான ருமேஷ் தரங்க , கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில்,...