உலக விளையாட்டுத் துறையில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய இருவேறு களங்களில் தங்களது திறமையால் அனைவரையும் வியக்க வைக்கும் இரு இளம் வீரர்களாக , ஸ்பெயினின் லமின் யமால் மற்றும் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் இருக்கின்றார்கள்.
19 வயதான யமால், எஃப்.சி. பார்சிலோனா கழகத்தின் நட்சத்திர வீரராகவும், ஸ்பெயின் அணியின் கால்பந்து கிண்ண இறுதிப்போட்டிப் பயணத்தில் முக்கிய வீரராகவும் கருதப்படும் இவர்,தனது இடது காலின் அபாரத் திறமையால் கோல்களைக் குவிக்கும் யமால், உலகின் இளம் தலைமுறை நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
அதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த உலக கிண்ண தொடர் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்தே பேசப்படும் விடயமாகவுள்ள, 2007-ஆம் ஆண்டு, ஒரு தொண்டு நிறுவனப் புகைப்படத்திற்காக லியோனல் மெஸ்ஸியின் கைகளில் தவழ்ந்த அதே குழந்தை, இன்று கால்பந்து கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸிக்கே சவாலாகக் களமிறங்குகிறது என்பது வரலாற்று அதிசயம்.
மறுபக்கம், இந்தியாவின் 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான துடுப்பாட்டம் மூலம் உலக கிரிக்கெட்டையே அதிசயிக்க வைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக 14 வயதில் களமிறங்கி, விளையாடிய இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
அது மாத்திரம் அல்லாமல், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, இந்தியாவின் இளம் சர்வதேச கிரிக்கெட் வீரராகவும் உருவெடுத்துள்ளார்.
2026 ஐ.பி.எல். தொடரில் 776 ஓட்டங்களைக் குவித்து, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோரை பின் தள்ளி Orange Cap இற்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
இரண்டு நட்சத்திரங்களும் விளையாட்டுடன் கல்வியிலும் சிறப்பு கவனத்தினை செலுத்தி வருகின்றனர்.
யமால் யூரோ 2024 தொடரின் போது தனது பாடசாலைப் பரீட்சைகளை எழுதினார்.
சூர்யவன்ஷி,10-ஆம் வகுப்புத் தேர்வுக்குத் தயாராகியிருந்தாலும், கிரிக்கெட் போட்டிகளின் காரணமாக அதை எழுத முடியாத சூழல் ஏற்பட்டமையானது சிறிது கவலைதான்.

