messi
விளையாட்டு

இந்த தொடரில் தங்க காலணி யாருக்கு? – தொடரும் சாதனைகள்

Share

ஆர்ஜன்டீனா அணி எகிப்திய அணிக்கு எதிராக பெற்ற மூன்றாவது கோல் சரித்திரக் கோலாக மாறியுள்ளது.

எதனால் இந்த கோல் இத்தனை சிறப்பினை பெறுகின்றது?
ஆம்,கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் 3000 ஆவது கோலாக இது பதிவாகி உள்ளமையே இந்த சிறப்பிற்கு காரணம்.

இதன்படி ஃபெர்னாண்டஸ் பெற்ற கோல், கால்பந்தாட்ட செம்பியன்சிப் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3,000வது கோலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

அதேநேரம் ஆட்டத்தில் 72 வது நிமிடங்கள் வரை எந்த கோலையும் பெறாத ஆர்ஜன்டீனா அணி ஆட்டம் நிறைவு பெற 11 நிமிடங்கள் இருந்தபோதும், மேலதிக நேரத்திலும் பெற்ற மூன்று கோல்கள் அந்த அணியின் வரலாற்றில் முக்கிய கோல்களாக மாறியுள்ளன.

கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் அர்ஜென்டீனா அணி 2 கோல்கள் பின்தங்கியிருந்த நிலையில் மீண்டு வந்து வெற்றி பெறுவதுவும் முதல் முறையாக பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் ஆர்ஜன்டீனாவின் சிறப்பாட்டக்காரர் மெஸ்ஸி இன்றைய வெற்றியின் பின்னர் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் விட்டு வெற்றியை கொண்டாடினார்.

மேலும், இன்றைய போட்டியில் ஒரு கோலை பெற்ற நிலையில், இந்தத் தொடரில் எட்டு கோல்களுடன் தங்கப் பாதணி விருதிற்கான போட்டியில் மீண்டும் மெஸ்ஸி முன்னிலை பெறுகிறார்.

அது மாத்திரம் அல்லாமல் இந்த சாதனை வரலாற்றில் இதுவரை 21 கோல்களை பெற்று தொடர்ந்தும் மெஸ்ஸி முன்னிலைப் பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்ததாக பிரான்ஸ் அணியின் கெலியன் எம்பாபே 19 கோல்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
போர்த்துக்கலின் ரொனால்டோ 15 கோல்களை பெற்றுள்ள அதே நேரம் இங்கிலாந்தின் ஹரி கேன் 14 கோல்களை பெற்றுள்ளார்.

Share
தொடர்புடையது
gseui7olytm.hg
விளையாட்டு

இலங்கை அணி தொடர்பில் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுனில் கவாஸ்கர்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெறவுள்ள தீர்மானமிக்க இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக,...

LPL கிரிக்கெட்
விளையாட்டு

LPL கிரிக்கெட் போட்டிக்கு இலவச நுழைவு வசதி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இன்று, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள லங்கா LPL கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப்...

Team India Have Arrived In Sri Lanka
விளையாட்டு

இலங்கை வந்தடைந்தது இந்திய அணி.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக...

Rumesh Tharanga
விளையாட்டு

வரலாற்று சாதனையுடன் இலங்கைக்கு கிடைத்த தங்கம்.

இலங்கை வீரரான ருமேஷ் தரங்க , கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில்,...