Theepan scaled
செய்திகள்அரசியல்இந்தியா

அதிபர், ஆசிரியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில்….? – இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்து

Share

நாளை 21ம் திகதி மற்றும் நாளை மறுதினம் 22ம் திகதிகளில் அதிபர் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு இன்று நடந்த ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய உபதலைவர் தீபன்தீலீசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசியல்வாதிகளுடனும் அரசோடு சேர்ந்து இயங்குகின்ற ஒரு சில அமைப்புகளும் சங்கங்களும், 21 ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வதென அறிவித்திருந்தாலும், அதிபர்களும், ஆசிரியர்களும் எங்கள் உரிமைக்காக பணியைப் பகிஸ்கரித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையிலே 21,22ம் திகதி பாடசாலைகள் அனைத்திற்கும் அதிபர் ஆசிரியர்கள் விடுமுறையை அறிவிக்காமல் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எந்தவித அச்சமுமின்றி அனைத்து அதிபர் ஆசிரியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

பகிஸ்கரித்தால் சம்பளத்தை நிறுத்துவோமென கூறினாலும் அவற்றை சட்ட ரீதியாக செயற்படுத்த முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பகிஸ்கரிப்பு நடைபெறும் பொழுது அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாக எந்த சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்ற சட்ட ஏற்பாடு காணப்படுகிறது.

அரசாங்கம் ஆசிரியர் அதிபர்களோடு தொடர்புபடாத யாரை வைத்து பாடசாலைகளை ஆரம்பித்தாலும், அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்லாத இடத்தில் எந்த விதமான பாதிப்புக்களும் ஆசிரியர் அதிபர்களுக்கு ஏற்படப் போவதில்லை. என்பதை நாங்கள் பொறுப்புடன் கூறிக் கொள்கிறோம்.

21,22 ஆம் திகதிகளில் மாணவர்களை பாடசாலைக்கு செல்வது எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக இருக்காது.

25ஆம் திகதி நாங்களாக பாடசாலைக்கு வரும்போது, உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள். நாங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்தல் செயற்பாடுகளைச் செய்ய தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilnkaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10
இந்தியாஇலங்கைசெய்திகள்

மோடியின் வருகையின் போது இலங்கையிடம் முன்மொழியப்பட்ட முக்கிய திட்டம் நிலுவையில்..

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது, இலங்கையுடன் நில இணைப்புத் திட்டத்தை இந்தியா...

12 3
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள்!

இந்தியாவின் (India) – வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

29 1
இந்தியாசெய்திகள்

கச்சதீவு விவகாரம் : தமிழக ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு

கச்சதீவு விவகாரம் : தமிழக ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு கச்சதீவில் இந்திய கடற்றொழிலாளர்கள் உரிமை பறிக்கப்பட்டதற்கு...

14
இந்தியாசெய்திகள்

சீமானை கைது செய்ய தமிழக அரசுக்கு அழுத்தம்!

பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைதுசெய்ய தி.க.விடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் சென்றுள்ளது...