செனகல் நாட்டில் புதிய பயணிகள் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் தலைநகர் டாக்கரில் இருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொழில் நகரமான டயாநியாடியோவை இணைக்கும் வகையில், இந்த ரயில் சேவையானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1960 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த நவீன ரயில் சேவையின் தொடக்க விழாவில், செனகல் அதிபர் மேக்கி சல் கலந்துகொண்டார்.
#SrilankaNews