வடகொரியாவில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தான் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது என வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தான் இவ்வாண்டின் தேசிய முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை கொவிட் பரவல் காரணமாக வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை தாண்டவமாடுகிறது.
ஆகவே வடகொரியா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே முக்கிய பணி என்றும் அதேநேரம் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதும் முக்கிய குறிக்கோள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், அமெரிக்கா அல்லது தென்கொரியா குறித்து எவ்விதக் கருத்துக்களையும் கூறவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#WorldNews