4ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்த ரெடியான நாடு!

Vaccine

இஸ்ரேல் நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 4ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார நிபுணர் குழுவின் பரிந்துரைகளை இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட் வரவேற்றுள்ளார். ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அரசின் இவ்வறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அந்நாட்டில் குறைந்தபட்சம் 340 பேர் ஒமைக்ரோன் தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா, ஜேர்மனி, இத்தாலி, துருக்கி, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் பயணிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

#WorldNews

Exit mobile version