அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாம் திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆழமாக உள்ளது.
நடிகர் பிரபாஸ் நடிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது ராதே ஷியாம் திரைப்படம்.
இந்நிலையில், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக காதல் ததும்பும் கீதமான ‘தரையோடு தூரிகை’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ‘தரையோடு தூரிகை’ பாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதோடு மட்டுமில்லாமல் படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
#CinemaNews