இந்த நடிகையை திருமணம் செய்யமாட்டேன் என மறுத்த கமல்: யார் அவர்..?

Kamal 1

நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை ஸ்ரீதேவி இணைந்து மூன்றாம் பிறை, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, என பல படங்களில் நடித்திருந்தனர்.

அப்போது, இவர்களது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் வெற்றியையும் பெற்றிருந்தது.

இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அப்போது கிசு கிசு செய்திகள் வெளியாகியிருந்தன.

அதற்குப் பின்னர் ஸ்ரீதேவியின் அம்மாவே கமலிடம் ” என் மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் ” என்று கேட்டிருக்கிறார்.

ஆனால், கமலோ ” ஸ்ரீதேவியும், நானும் ஜோடியாக பல படங்களில் நடித்திருந்தாலும், அவர் என்னை சார் என்றே அழைத்து வருகிறார். நானும் ஸ்ரீ தேவியை என் தங்கையாக தான் பார்க்கிறேன் ” என்று கமல்ஹாசன் கூறிவிட்டாராம்.

Exit mobile version