இனிமையான குரலால் ரசிகர்களின் மனதைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலுக்குப் பெற்றுக்கொள்ளும் சம்பளம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் ஸ்ரேயா கோஷல் பாடி வருகிறார்.
ஒரு பாட்டுக்கு 3 இலட்சத்தில் இருந்து மூன்றரை இலட்சம் வரை வாங்குகிறார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், 4 முறை தேசிய விருது பெற்றவர். 16 வயதில் இருந்து இந்தி படங்களில் பாடி வருகிறார்.
ஸ்ரேயா கோசல் பாடிய ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் இடம்பெற்ற ‘‘முன்பே வா…, ’’ ‘வெயில்’ படத்தில் இடம்பெற்ற ‘‘உருகுதே மருகுதே…, ’’ ‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற ‘‘அண்டங்காக்கா கொண்டக்காரி, ’’ ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இடம்பெற்ற ‘‘மன்னிப்பாயா…’’ ஆகிய பாடல்கள், ரசிகர்களை பெரிதும் ஈர்த்த பாடல்களாகவே உள்ளன,
#CinemaNews