இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கின்றார். அந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவிருக்கின்றார் எனவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் உள்ளிட்டப் படங்களில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இதில், கோப்ரா திரைப்பட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவடைகின்ற நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்படுகிறது.
சார்பட்டா பரம்பரை வெற்றிக்குப்பிறகு இயக்குநர் பா. ரஞ்சித் நட்சத்திரங்கள் நகர்கிறது, குதிரைவால், ரைட்டர், மாரிசெல்வராஜ் துருவ் விக்ரம் இணையும் படம் என பல படங்களையும் தயாரித்து வருகிறார்.
நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு முடிந்தவுடன் பா.ரஞ்சித் விக்ரம் 61 படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு, முதல் முறையாக பா.ரஞ்சித் இசை ஞானி இளையராஜாவுடன் இணைகிறார் என்று ததகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Leave a comment