முதன்முறையாக….. நடிகர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

Pirabhudeva and vijay

விஜய் 66’ படத்திற்கு நடிகர் பிரபுதேவா நடனம் அமைக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகும் விஜய் 66 இல் நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் கசிந்துள்ளன.

இதுதொடர்பான அறிவிப்புகள் கடந்த செப்டெம்பர் மாதம் வெளியாகியிருந்த நிலையில், தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

எனவே எதிர்வரும் ஏப்ரல் மாதம் விஜய் 66 படப்பிடிப்புகள் ஆரம்பிக்கலாம் எனவும், நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் இப்படத்தில் 02 பாடல்களுக்கு பிரபுதேவா நடனம் அமைக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் முதன் முறையாக தெலுங்குப் படத்தில் இப்படத்தின் மூலம் அறிமுகமாக இருப்பதால், வித்தியாசமான நடனம் என்பன சிறப்பாக கவனிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

#CinemaNews

Exit mobile version