விஜய் தேவர்கொண்டா மைக் டைசன் காட்சிகளை எடுப்பதற்காக படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா உற்சாகமுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தேவர்கொண்டா ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்திற்குப் பிறகு பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, பிரபல பொலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன் நாத் இணைந்து தயாரிக்கிறார்கள்.
Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், Iron Mike எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். முதன்முறையாக மைக் டைசன் நடிக்கும் முதல் இந்தியப் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத் திரைப்படம்தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்டப் பல மொழிகளில் வெளியாகும்.
Leave a comment