தமிழில் ஸ்ரீகாந்தின் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்த சந்திரா லட்சுமண் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
நடிகை சந்திரா லட்சுமண், டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ள அவர் தற்போது மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.
சந்திரா லட்சுமண் 38 வயதாகியும் திருமணம் செய்யாதிருந்த நிலையில், எப்போது திருமணம் என ரசிகர்கள் கேள்விகளைக் கேட்டிருந்தனர்.
ரசிகர்களின் கேள்விக்குப் பதில் கிடைக்கும் விதமாக சந்திரா லட்சுமண்-டோஷ் கிறிஸ்டி திருமணம் கேரளாவில் நடந்தது.
இந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். இருவருக்கும் திரையுலகினரும், ரசிகர்களும் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
#CinemaNews