தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தமன்னாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அம்மன் வேடத்தில் தமன்னா…. வைரலாகும் புகைப்படம்
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தற்போது அம்மன் வேடமிட்டு தலை வாழை இலையில் உணவு சாப்பிடும் புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ‘‘வாழை இலையில் உணவு சாப்பிடும்போது என்னை கடவுளாக உணர்கிறேன்” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
தமன்னாவின் அம்மன் வேட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
புதிய படத்தில் அம்மனாக நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமன்னா தற்போது தெலுங்கில் 4 படங்களிலும், இந்தியில் 2 படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#CinemaNews