விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளவும் மற்ற போட்டியாளர்களை கவிழ்க்கவும் செய்யும் முயற்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் இன்று பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகிறது. இன்றைய முதல் புரமோவில் மணிகண்டன் ஆவேசம் ஆனார். இரண்டாவதுபுரமோ வீடியோவில் ஜனனி பெயர் கொண்ட பொம்மையை ஷெரினா கையிலெடுத்து வைத்துக்கொண்டு அவ்விடத்திலேயே நிக்கிறார். அதனால் ஜனனி இந்த போட்டியில் தொடர முடியாது என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து அமுதவாணன், தனலட்சுமி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோரிடம் ’என்னிடம் நல்ல முறையில் பழகினால் நான் மிகவும் அன்புடன் இருப்பேன், ஆனால் என்னிடம் மோத நினைத்தால் என்னை மாதிரி கெட்டவள் உலகத்திலேயே யாரும் கிடையாது. என்ன மாதிரி அப்பாவியும் யாரும் கிடையாது, என்னை மாதிரி கெட்டவளும் யாரும் கிடையாது என ஜனனி ஆவேசமாக கூறுகிறார்.
நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் அமைதியாகவே இருந்து வரும் ஜனனியின் இந்த ஆவேசம் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை ஜனனியுடன் நெருக்கமாக பழகி வந்த ஷெரினா நேற்றையதினம் ஜனனியை நோமின்டே செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது நேரடியாகவே ஜனனிக்கு எதிராக களமிறங்கியுள்ளார்.
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ஷெரினுக்கு இடையே என்ன பிரச்சனை ஏற்பட போகிறது என்பதை.
#BiggBoss
Leave a comment