தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் இதயத்தை தனது நடனத்தாலும் நடிப்புத் திறமையாலும் கொள்ளைகொண்டவர் நடிகை சிம்ரன்.
விஜய், அஜித், ரஜினிகாந்த் உட்பட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் சிம்ரன்.
முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “யூத்” திரைப்படத்தில் “ஆள்தோட்ட பூபதி நானடா” என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.
இந்தப் பாடல் வெளியான காலம் முதல் இன்று வரை ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. இந்நிலையில் 19 வருடம் கழித்து நடிகை சிம்ரன் மீண்டும் அதே பாடலுக்கு நடனம் ஆடி தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Leave a comment