3 37
ஏனையவை

கணவனால் இளம் தாய்க்கு ஏற்பட்ட விபரீதம்

Share

கணவனால் இளம் தாய்க்கு ஏற்பட்ட விபரீதம்

மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து கணவன் இரண்டு பிள்ளைகளின் தாயின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளதாக புத்தளம்(puttalam) காவல்துறையினர் தெரிவித்தனர்.

பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான இரண்டு பிள்ளைகளின் தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று (19) உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ஜமால்தீன் பாத்திமா சபுனா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மனைவியை அணைக்கச் சென்ற போது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த கணவனுக்கும் சிறு தீக்காயங்கள் ஏற்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணவன் தீ வைத்ததையடுத்து, இரண்டு பிள்ளைகளின் தாயான அவரை,அயலவர்கள் மீட்டு, உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...

ஏனையவை

Top Funkce Aplikace Mostbet, Které Byste Měli Znát

Top Funkce Aplikace Mostbet, Které Byste Měli Znát Aplikace Mostbet se stává...