பிரபல கிரிகெட் வீரரான விராட் கோலி மும்பை புறநகர் பகுதியான ஜீஹுவில் ஓட்டல் ஒன்றை திறக்கவுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.
அவர் மறைந்த பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவில் ரெஸ்டாரண்ட்டை விராட் கோலி நடத்த உள்ளார்.
இது தொடர்பாக கிஷோர்குமாரின் மகன் சுமித்குமாரை சந்தித்த விராட் கோலி, ஓட்டல் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளார்.
இந்த பங்களாவில் ஏராளமான தாவரங்கள் உள்ளன. அவைகள் அகற்றப்படமாட்டாது என்றும் உணவகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் புதிய உணவகம், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Viratkohli
Leave a comment