மாவீரர் நாளை முன்னிட்டு மறுமலர்ச்சி கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினார்.
இந்த நிகழ்வு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில் இன்று காலை 7 மணி அளவில் இடம்பெற்றது.
நிகழ்வில் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.இராசேந்திரன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மற்றும் எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்று ஈழப் போரில் தங்கள் உயிர்களை நீத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
#India