எங்களுடன் வைத்துக்கொண்டால்.., ஈராக், சிரியாவின் 85 தளங்களில் அமெரிக்கா பதிலடி தாக்குதல்

24 65be1c8500f28

எங்களுடன் வைத்துக்கொண்டால்.., ஈராக், சிரியாவின் 85 தளங்களில் அமெரிக்கா பதிலடி தாக்குதல்

ஜோர்டானில் உள்ள தங்கள் முகாம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆதரவுடன் 85க்கும் மேற்பட்ட போராளித் தளங்களை அமெரிக்க போர் விமானங்கள் குறிவைத்தன. இதன் விளைவாக சிரியாவில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கு கட்டணம் பலமடங்கு உயர்வு., ஏப்ரல் 1 முதல் அமுல்
புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கு கட்டணம் பலமடங்கு உயர்வு., ஏப்ரல் 1 முதல் அமுல்
வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் இந்தத் தாக்குதல்கள் நடந்தன.

முக்கிய கட்டளைக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உளவுத்துறை மையங்கள், ரொக்கெட்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், வெடிமருந்து சேமிப்பு கிடங்குகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு சொந்தமான தளவாட வசதிகள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோர்டானில் ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு அறிக்கையில், அமெரிக்கர்களுக்கு யாராவது தீங்கு விளைவித்தால், அவர்கள் தக்க பதிலடி பெறுவார்கள் என்று கூறினார்.

 

Exit mobile version