5 37
ஏனையவை

150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..

Share

150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..

தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த ராயன் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக குபேரா வெளிவரவுள்ளது.

இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகராகவும் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தனுஷ் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

ராயன் படத்தை முடித்தகையோடு, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார். மேலும் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி கொண்டு தனுஷ், அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

நயன்தாரா – தனுஷ் இடையே ஏற்பட்டுள்ள மோதல், தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கிக்கொண்டிருக்கும் தனுஷின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

நடிகர் தனுஷிற்கு போயஸ் கார்டனில் வீடு இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்த வீட்டின் மதிப்பு ரூ. 150 கோடி இருக்குமாம்.

மேலும் ரூ. 45 லட்சம் மதிப்புள்ள Jaguar XE, ரூ. 75 லட்சம் மதிப்புள்ள Ford Mustang, ரூ. 1.65 கோடி Audi A8, ரூ. 3.40 கோடி மதிப்புள்ள Bentley Continental Flying Spur மற்றும் ரூ. 7 கோடி மதிப்புள்ள Rolls Royce Ghost, ரூ.1.50 கோடி மதிப்புள்ள Range Rover Sport HSE, ரூ. 1.42 கோடி மதிப்புள்ள Mercedes-Benz S-Class S350 ஆகிய கார்களை வைத்துள்ளாராம்.

தனுஷின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 230 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...