ஏனையவை

இன்றைய ராசி பலன் : 15 நவம்பர் 2024 – Daily Horoscope

Share
tamilnaadi 4 scaled
Share

இன்றைய ராசி பலன் : 15 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 15.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 22 வெள்ளிக் கிழமை, சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமற்ற நாளாக இருக்கும். இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எந்த செயலிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. முதலீடு அல்லது பிற பண பரிவர்த்தனை விஷயத்தில் கவனம் தேவை. இன்று உங்களின் வார்த்தைகளில் இனிமையை கடைபிடிக்கவும். பணியிடத்தில் பிறரை அனுசரித்து செல்லவும். இன்று வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஆரோக்கியம் சீராக இருக்கும். தைரியம் குறையும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செயல்பாடு தனித்துவத்துடன் இருக்கும். நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் அதில் சிறப்பான வெற்றியை பெறலாம். இன்று உங்களின் பிடிவாத குணத்தை தளர்த்தி கொள்வது நல்லது. வீட்டு தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதும், சர்ச்சைகளை தவிர்ப்பது நல்லது. வேலை தொடர்பாக போட்டி அதிகமாக இருக்கும். உடல் நிலையில் கவனம் தேவை.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்புக்கு சிறப்பான பலன் கிடைக்கக் கூடிய நாள். ஆரம்பத்தில் சோம்பேறித்தனம் அதிகமாக இருக்கும். இன்று புதிய ஒப்பந்தங்கள் அல்லது எதிர்பார்த்த கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையாக செலவிட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சில மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் தொண்டு உணர்வு அதிகரிக்கும். இன்று அதிகமாக பணம் செலவழித்தாலும் எதிர்பார்த்த மன அமைதி கிடைக்காது. இன்று எதிர்பார்த்ததை விட வியாபாரத்தில் லாபம் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று புதிதாக அறிமுகமானவர்களின் உதவியால் சில நன்மைகள் அடைவீர்கள். இன்று பயணங்கள் தொடர்பாக திட்டமிடுவீர்கள். முக்கிய வேலைகள் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். இன்று உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் ஆரோக்கியப் பிரச்சினை தொந்தரவு தர வாய்ப்புள்ளது. உடல் பலவீனத்தால் சோம்பலுடன் செயல்படுவீர்கள். வீட்டில் தேவையற்ற கருத்து வேறுபாட்டால் மன உளைச்சல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்பீர்கள். இன்று பணம் தொடர்பான பிரச்சனைகள் உருவாகும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். இன்று முடிந்தவரை வீண் செலவுகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் முதல் பாதியில் ஏதேனும் அலைச்சல் நிறைந்ததாக இருக்கும். இதனால் உங்கள் வேலை தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சிரமங்கள் ஏற்படும். இன்று உங்களின் வேலை மற்றும் வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்பட சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். தடைப்பட்ட பணிகளில் வேகம் அதிகரிக்கும். இன்று அபாயகரமான வேலைகள் ஈடுபட வேண்டாம். உங்களின் விருப்பங்கள் நிறைவேறி குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். நாளின் தொடக்கத்தில் சில கெட்ட செய்திகள் வர வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிபுணர்களின் ஆலோசனை பெற்ற பின்னர் எடுப்பது நல்லது. இன்று மனம் நிலையற்ற தன்மையுடன் இருக்கும்.உங்கள் வேலையில் அலட்சியம் காட்ட வேண்டாம். தனிப்பட்ட உறவிலும், வருமான விஷயத்திலும் மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் தொடக்கத்தில் எந்த வேலையை செய்ய நினைத்தாலும் அதில் சில தடைகள், தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று கோபமும், உணர்ச்சிவசப்படக் கூடிய மனநிலையிலும் இருப்பீர்கள். இன்று யாரிடமும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற அலைச்சல்கள் சந்திக்க நேரிடும். செலவுகளை கட்டுப்படுத்தவும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஸ்டாலின் தொடக்கத்தில் உங்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். மதியத்திற்கு பிறகு எந்த செயலிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். முக்கிய வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் தொடக்கத்தில் சில பாதகமான சூழல் இருக்கும். வீட்டில் தேவையற்ற விஷயங்கள் வாக்குவாதங்கள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டிய நாள். உங்கள் வேலையை முடிப்பதில் தாமதம் ஏற்பாடும். உடல் நலக்குறைவு காரணமாக உற்சாகம் இழப்பீர்கள். தொழிலில் கடினமாக உழைத்த பின்னரே எதிர்பார்த்த நன்மை அடைவீர்கள்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பண ஆதாயம் கிடைக்கக்கூடிய நாள். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் திடீர் பணவரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் எதிர்பார்த்த உதவிகளை செய்வீர்கள். முக்கியமான வேலைகளை மதியத்திற்கு முன் முடிக்க முயற்சிக்கவும். வியாபாரத்தில் கடினமான சூழல் இருக்கும். இன்று உங்கள் பேச்சிலும், கருத்து வைப்பதிலும் நாகரீகமாக நடந்து கொள்ளவும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். நாளில் முற்பகுதியில் உங்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொலைதூரத்தில் இருந்து சில நல்ல செய்திகள் தேடி வரும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாகும். மதியத்திற்கு பின்னர் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் வருத்தம் அடைவீர்கள். உங்கள் வேலையில் சில இடையூறுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இன்று வண்டி, வாகன பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...