வாளுடன் டிக்டொக் காணொலி செய்து வெளியிட்ட இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 வயதேயான சங்கானையைச் சேர்ந்த இளைஞன் சுன்னாகம் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் விசாரணைகளின் பின் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment