இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் “பதான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு “பதான்” திரைப்படத்தின் முதல் பாடலான ‘அழையா மழை’ பாடல் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் அடுத்த பாடலான ‘ஜூம் பூம் தூம்’ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஷாருக்கான் ‘பார்ட்டி ஆரம்பிக்கலாமா?’ என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
‘பதான்’ திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 25-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#cinema
Leave a comment