கணவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி படுகொலை!

D6w2bM8UaHVvUA1wVHqB 1
பொலனறுவை – புலஸ்திகம பிரதேசத்தில் நேற்று (9) தனது கணவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி படுகொலை செய்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உயிரிழந்தவர் புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரென என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக நேற்றுக் காலை முதல் இருவருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், அதன்போது மனைவி கூரிய ஆயுதத்தினால் கணவரை தாக்கியுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சண்டையின்போது காயமடைந்த மனைவியும், புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ் இவ்விடயம் பொலன்னறுவை நீதவானுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி சந்தேகநபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் பொலிஸ் காவலில், சிகிச்சை பெற்று வருகின்றார்.

#srilankaNews

Exit mobile version